Haraappan
Haraappan

@haraappan

8 Tweets 2 reads Apr 22, 2024
#IndianMuslim #PMHateSpeech
5 வருடங்களுக்கு முன்பு ஒடிசாவில் நக்சல் பகுதிகளில் மின்சாரம் எடுத்துச்செல்லும் ஒரு Projectல் வேலை செய்துக்கொண்டிருந்தேன்
ஒரு தீபாவளி நாளுக்கான முன்தினம் அனைவரும் விடுமுறைக்கு சென்று விட்டனர்.தமிழ் ஆட்கள் தூரம் கருதியும் பெரிய ஈர்ப்பு இல்லாததாலும்
1/N
செல்லவில்லை.தமிழ் ஆட்கள் எங்கள் ஊரில் தீபாவளி எப்படி இருக்கும் என்று பேசிக்கொண்டிருந்தோம். சினிமாவுக்கு போவது, கறிக்குழம்பு சாப்பிடுவது என்று பேசிக்கொண்டிருந்தபோதே ஒரு தமிழ் ஆளுக்கு வீட்டில் இருந்து போன் வந்தது.அவர் அம்மா என்னடா ஒரு நல்ல நாளுக்குக்கூட வீட்டுக்கு வர மாடிக்கிற 2/N
வீடே வெறிச்சோடி கிடக்கு என்று சோகமாக பேசிக்கொண்டிருந்தார். அவர் அதை பகிரிந்துக்கொள்ள அனைவருக்கும் அந்த சோகம் பற்றிக்கொண்டது.நம்பிக்கை இருக்கு இல்லை என்பதை தாண்டி ச்ச குடும்பத்துக்க்காவது வீட்டுக்கு போயிருக்கலாம் என்று அனைவரும் பேசத்தொடங்கினர். இதை எல்லாம் ஒரு ஒடிசாக்காரர் 3/N
கேட்டுக்கொண்டே இருந்தார்.இரவு வீட்டுக்கு செல்லும்போது நாளைக்கு லீவுத்தான எங்க வீட்டுப்பக்கம் ஒரு நதி இருக்கு சும்மா வாங்க குளிச்சு timepass பண்ணலாம்னு கூப்டார்.நாங்களும் அடுத்த நாள் அவர் சொன்ன இடத்துக்கு சென்று மதியம் வரை நல்லா ஆடிப்பாடி குளித்துவிட்டு roomக்கு செல்லவிருந்தோம்4/N
அப்போது அவர் இவ்வளவு தூரம் வந்துட்டிங்க எங்க வீட்டுக்கு வந்து ஒரு டீ குடிச்சிட்டு போங்க என்றார்.நாங்கள் வேண்டாம் நிறைய பேர் இருக்ககோம் வீட்டுல எதுக்கு சிரமம் என்று தவிர்த்தோம்.ஆனால் அவர் விடாப்படியாக வரிங்களா இல்லையா என்று அழைத்துச்சென்றுவிட்டார்.
5/N
வீட்டிற்கு சென்றால் இன்ப அதிர்ச்சி.அவர் குடும்பமே எங்களை வரவேற்க ஒரு பெரிய விருந்தே தயார் செய்து வைத்திருந்தார்கள்.கிட்டத்தட்ட 10-15 ஐட்டம் இருக்கும்.
அவரின் அம்மா தீபாவளிக்கு ஊருக்கு போலைனு வருத்தப்படாதிங்க இதுவும் உங்க வீடு மாறிதான் நான் உங்க அம்மா மாறிதான் 6/N
வருத்தப்படக்கூடாதுனு ஆறுதல் சொன்னார்.அன்று முழுவதும் அவர் வீட்டில் ஒரு திருவிழா கோலம்போல் பேசி சிரித்து நாள் முழுவதும் கடந்தது.
அந்த நண்பர் என் மொழி கிடையாது, என் இனம் இடையாது, எங்களின் பலர் மதம் கிடையாது
அவர் பெயர் "Sabhas Khan"
7/N
இந்தியா என்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் இதுப்போல் பல கதைகள் அனைவரிடமும் இருக்கும்.
சங்கிகள், ஜோம்பிகள் போன்ற வெறுப்பின் மீது கட்டமைத்த சித்தாந்தத்தை தாண்டி இந்த நாடு அன்பால் இயங்கிக்கொண்டிருக்கிறது.
பிரிவினை ஏற்படுத்துபவர்கள் வரலாற்றில் காணாமல் போவார்கள்.

Loading suggestions...