Bala vetrivel N
Bala vetrivel N

@vetrivel1996

7 Tweets 5 reads Dec 10, 2023
ஒரு வித்தியாசமான கேஸ் :
25 ஏக்கர்
 1500 வீடுகள் 
20 மாடிகள்
10,000க்கும் மேற்பட்ட மக்கள்
என பார்ப்பதற்கு பிரம்மாண்டமாக காணப்படும் இந்த தனியார் அடுக்குமாடி குடியிருப்பு அமைந்திருப்பது பெரும்பாக்கத்தில்.
#CycloneMichaung #ChennaiFloods2023
4ம் தேதி பெய்த கன மழையில் பெரும்பாக்கம் ஏரி முழுவதுமாக நிரம்பி அதிலிருந்து வெளியேறிய மழை நீர் அடுக்குமாடி குடியிருப்பை முழுவதுமாக சூழ்ந்தது. நேற்று வரை ஒரு அடி அளவிற்கு தரைத்தளத்தில் மழை நீர் இருந்த நிலையில் இன்று அவை அகற்றப்பட்டுள்ளது.
ஆனாலும் இந்த குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்பில் சுரங்க தளத்தில் கார் பார்க்கிங் அமைந்துள்ளது.நான்காம் தேதி காலை வரை ஒரு சொட்டு நீர் கூட இந்த அடுக்குமாடி குடியிருப்பில் தேங்காத நிலையில், ஏரியிலிருந்து அதிகப்படியான உபரி நீர் வெளியேற்றப்பட்டதால்
அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சுரங்கத் தளத்தில் ஓட்டை ஏற்பட்டு, ஏரி நீர் முழுவதுமாக உட்புகுந்துள்ளது. தரைத்தளத்தில் மழை நீர் வடிந்தாலும் சுரங்கத்தில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றுவது மிகவும் சவால் நிறைந்த பணியாக உள்ளது.
குறிப்பாக தரைத்தளம் குடியிருப்பு அமைந்துள்ள முழு பகுதியிலும் இருப்பதால் சுமார் 30 கோடி லிட்டர் மழை நீர் உள்ளே இருப்பதாக கூறப்படுகிறது. 15 அடி அளவிற்கு கீழே மழைநீர் சூழ்ந்துள்ளதால் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே தரைத்தளத்தில் 100க்கும் மேற்பட்ட கார்களும், 40 இருசக்கர வாகனங்களும் சிக்கியுள்ளது. மேலும் 10 நாட்கள் மழை நீர் அடுக்குமாடி குடியிருப்பின் அடித்தளத்தில் தேங்கி இருக்கும் பட்சத்தில் 20 மாடி கட்டிடத்தின் உறுதித் தன்மை கேள்விக்குறியாகும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
தற்போது வரை எட்டு ராட்சச மோட்டார்கள் மூலம் மழை நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் நீரை முழுமையாக வெளியேற்ற 25 நாட்கள் ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது.

Loading suggestions...