புகழ்
புகழ்

@pugal_h

17 Tweets 8 reads Aug 20, 2023
இது 'நீட்' அல்ல அசிங்கம்!
நீட் தேர்வில் ஒரு பாடத்தில் ஜீரோ மதிப்பெண் எடுத்தவர்கள் எல்லாம் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்திருக்கும் கொடுமை 2017 ஆம் ஆண்டு நடந்திருக்கிறது.நீட் தேர்வு தகுதியானவர்களையும் திறமையானவர்களையும் உருவாக்கும் என்று கூறுவோரை எதைக் கொண்டு அடிப்பது? 1/n
#BanNEET
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடத்திய போது, இயற்பியல், வேதியியல் மற்றும் தாவரவியல் ஆகிய 3 பாடங்களையும் சேர்த்து கட்ஆஃப் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
இந்த கட்ஆஃப் எடுத்த ஏழை மாணவர்களும் அரசு மருத்துவக்கல்லூரிகளில் எளிதாக சேர முடிந்தது. 2/n
#BanNEET
கல்விக்கட்டணமும் மிகக் குறைவாகவே இருந்தது.
ஆனால் நீட் தேர்வில் கட் ஆஃப் முறையே கிடையாது. ஒரு பாடத்தில் ஜீரோ மதிப்பெண் எடுத்தாலும் தனியார் மருத்துவக்கல்லூரியில் எளிதாக சேர்ந்துவிட முடியும். அதாவது, பணம் இருந்தால் அது சாத்தியம். 3/n
#BanNEET
சமீபத்தில் சென்னை மாணவர் ஜெகதீஸ்வரன் என்ற மாணவர் ‘நீட்’கொடுமைக்கு பலியானார்.
அவரது நண்பர் பேசும்போது, ‘‘நீட்டில் 160 மதிப்பெண்கள் எடுத்தேன். வசதியானவன் என்பதால் நான் தனியார் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்துவிட்டேன். 4/n
#BanNEET
ஆனால், என்னை விட அதிகமாக 420 மதிப்பெண்கள் எடுத்த ஜெகதீஸ்வரனால் சேர முடியவில்லை.
பணத்தை கொடுத்து சேரும் என்னைப் போன்றோர் டாக்டர்களாகி மக்களுக்கா சேவை செய்வார்கள்? போட்ட பணத்தை எடுக்கத்தானே முயற்சிப்போம். மக்களுக்கு சேவை செய்வேன் என்று சொன்ன ஜெகதீஸ்வரனுக்கு கிடைக்கவில்லை. 5/n
இந்த நீட் தேர்வால் என்ன பயன் ? திறமையில்லாத டாக்டர்களை தான் நீட் தேர்வு உருவாக்குகிறது’’ என்று பொட்டில் அடித்ததுபோல் கூறினார்.
அவர் கூறியது நூறு சதவீதம் உண்மை என்பதை ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளேடு சமீபத்தில் நடத்திய சர்வே மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. 6/n
#BanNEET
2017 ம் ஆண்டு நடந்த நீட் தேர்வின் லட்சணத்தை இந்த சர்வே அம்பலப்படுத்தியுள்ளது.
இயற்பியலில் 180 க்கு -2 மதிப்பெண்ணும், வேதியியலில் 180 க்கு மைனஸ் 4 மதிப்பெண்களும், தாவரவியலில் 360 மதிப்பெண்களுக்கு 139 மதிப்பெண்களும் பெற்றவர்களது நீட் ரேங்க் 5 லட்சத்து 30 ஆயிரம். 7/n
#BanNEET
இயற்பியலில் 180 க்கு மைனஸ் 2 மதிப்பெண்களும், வேதியியலில் 180 க்கு ஜீரோ மதிப்பெண்ணும், தாவரவியலில் 360 க்கு 131 மதிப்பெண்களும் பெற்றவர்களது நீட் ரேங்க் 5 லட்சத்து 40 ஆயிரம்.
இயற்பியலில் 180 க்கு 9 மதிப்பெண்களும், வேதியியலில் 180 க்கு மைனஸ் 2 மதிப்பெண்களும், 8/n
#BanNEET
தாவரவியலில் 360 க்கு 113 மதிப்பெண்களும் பெற்றவர்களின் நீட் ரேங்க் 5 லட்சத்து 80 ஆயிரம்.
இயற்பியலில் 180க்கு 5 மதிப்பெண்களும், வேதியியலில் ஜீரோ மதிப்பெண்களும், தாவரவியலில் 110 மதிப்பெண்களும் பெற்றவர்களின் நீட் ரேங்க் 6 லட்சம்.
இயற்பியலில் 180க்கு 3 மதிப்பெண்களும், 9/n
வேதியியலில் 180க்கு மைனஸ் 10 மதிப்பெண்களும்,தாவரவியலில் 360க்கு 118 மதிப்பெண்களும் பெற்றவர்களின் நீட் ரேங்க் 6.20 லட்சம். இயற்பியலில் 180க்கு 54 மதிப்பெண்களும்,வேதியியலில் 180 க்கு 40 மதிப்பெண்களும், தாவரவியலில் 360க்கு 15 மதிப்பெண்களும் பெற்றவர்களின் நீட் ரேங்க் 6.30லட்சம் 10/n
ஜீரோ மதிப்பெண் எடுத்தாலும் பணம் இருந்தால் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலையை நீட் தேர்வு உருவாக்கியிருக்கிறது. இயற்பியல் மற்றும் வேதியியலில் ஒற்றை இலக்க மதிப்பெண் எடுத்த 400 மாணவர்களுக்கும்,ஜீரோ மற்றும் நெகட்டிவ் மதிப்பெண்கள் எடுத்த 110 மாணவர்களுக்கும் தனியார் 11/n
#BanNEET
மருத்துவக்கல்லூரிகளில் படிக்க நீட் தேர்வு வாய்ப்பு கொடுத்திருக்கிறது. ஒரு பாடத்தில் ஜீரோ எடுத்த மாணவர் மருத்துவப் படிப்புக்கு தகுதியானவர் என்கிறது நீட் தேர்வு. ஆனால், மாநில பாடத்திட்டத்தில் அனைத்துப் பாடங்களிலும் 95 சதவீதத்துக்கு அதிகம் மதிப்பெண்கள் எடுத்தாலும் வாய்ப்பில்லை. 12/n
இதைவிட அசிங்கம் ஏதும் உண்டா?
2017 ஆம் ஆண்டு நீட் தேர்வில் 720க்கு 150 மதிப்பெண் பெற்ற 1,990 மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் படிக்க சீட் கிடைத்திருக்கிறது.
இவர்களில் 530 மாணவர்கள் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் ஒற்றை இலக்க மதிப்பெண், 13/n
#BanNEET
ஜீரோ அல்லது அதற்கும் குறைவாக நெகட்டிவ் மதிப்பெண்களைப் பெற்றவர்கள்.
இந்த 530 பேரில் 507 பேருக்கு தனியார் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்தது. இவர்கள் ஆண்டுக்கு ரூ. 17 லட்சம் கல்விக் கட்டணம் கட்டி மருத்துவப் படிப்பில் சேர்ந்திருக்கிறார்கள்.
திறமையான மாணவர்களைப்.. 14/n
#BanNEET
புறக்கணித்துவிட்டு பணக்கார மாணவர்களுக்கு வாய்ப்பு தருகிறது ‘நீட்’தேர்வு என்பதற்கு இதைவிட வேறென்ன சான்று?
பிளஸ் 2 அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை நடந்த போது, கவுன்சிலிங்கில் தனியார் மருத்துவக்கல்லூரிகள் கிடைத்தாலும், அதற்கான கல்விக்கட்டணத்தை அரசே நிர்ணயித்தது. 15/n
அந்தக் கட்டணம் குறைவாக இருந்ததால், ஏழை மாணவர்களும் கல்விக் கடன் பெற்று படிக்க முடிந்தது.
ஆனால் இன்றைக்கு ? திறமை இருந்தாலும், பிளஸ் 2 தேர்வில் 100 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தாலும் ஏழை மாணவரால் மருத்துவப் படிப்பில் சேர முடியாது. 16/n
#BanNEET
ஆனால், நீட் தேர்வில் ஜீரோ மதிப்பெண் எடுத்தாலும், வசதி இருந்தால் தனியார் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து டாக்டராக முடியும். இந்த ஒற்றைக் காரணம் தான் நம் 15 மாணவச் செல்வங்களை பலி வாங்கியிருக்கிறது. இதற்கு மோடி அரசும்,முந்தைய எடுபிடி எடப்பாடி அரசும் தான் பொறுப்பேற்க வேண்டும். 17/17

Loading suggestions...