அரசு சார்ந்த அனைத்து வகை பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகளுக்கு கட்டிடங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள், சோதனைக்கூடங்கள், கழிப்பறைகள்,சைக்கிள் நிறுத்துமிடங்கள் கட்டுதல், பள்ளிகளில் உள்ள கட்டிடங்களை பழுதுபார்த்தல், புனரமைத் தல் பணி எடுக்கப்பட வேண்டும்.
சமூக நலக்கூடங்கள், சமையலறைகள், உணவறைகள் கட்டுதல், பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகள் கட்டுதல், பொது இடங்கள், சாலை சந்திப்புகளில் விளக்குகள் அமைத்தல் போன்ற பணிகள்எடுக்கப்பட வேண்டும்,
மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் உருவாக்குதல், ஊரக நூலகங்கள்,சத்துணவு கூடங்கள், நியாயவிலைகடை கட்டிடங்கள் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் எடுக்கப்படலாம்
சம்பந்தப்பட்ட நிலஉரிமையாளர் அனுமதியின்றி எந்தஒரு நிரந்தர கட்டுமானமும் அமைக்கப்பட கூடாது என்பது உள்ளிட்ட விரிவான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
Loading suggestions...