அன்பெழில்
அன்பெழில்

@anbezhil12

13 Tweets 27 reads Jun 17, 2023
#திருப்பாவை_சில_தகவல்கள்
திருப்பாவை என்பது ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் அருளிச்செய்த திவ்ய பிரபந்தம் 30 பாசுரங்களைக் கொண்டது. நம்மில் அநேகம் பேர் மார்கழி மாதம் இந்த திருப்பாவை பாராயணம் செய்வோம். நிறைய பேருக்கு இது மனப்பாடமாகவும் தெரியும். சில தெரியாத தகவல்கள்:
1. கன்னடத்தை தாய்மொழியாக
கொண்ட விஜயநகர பேரரசர் கிருஷ்ணதேவராயர் தெலுங்கு மொழியில் #ஆமுக்த_மால்யதா என்ற பெரிய காப்பியம் ஒன்றை எழுதினார் அதில் ஆண்டாள்தான் காவிய நாயகி ஆமுக்த மால்யதா என்றால் சூடிக் கொடுத்தவள் என்று பொருள். இந்த நூல் ஆந்திர பல்கலைக்கழகத்தில் பாட நூலாக இருக்கிறது. கன்னடத்திலும் தெலுங்கிலும்
திருப்பாவையை அச்சிட்டு நிறைய பேர் கோவில்களில் மற்றும் வீடுகளிலும் பாராயணம் செய்கிறார்கள்.
2. பெருமாளை துயில் எழுப்புவது சுப்ரபாதம் என்று சொல்கிறோம் திருமலையில் சுப்ரபாத சேவை மிக பிரசித்தம். தமிழில் இதை திருப்பள்ளி எழுச்சி என்று கூறுகிறோம். அடியவர்களை எழுப்புவதோடு பெருமாளையும்
எழுப்பும் திருப்பள்ளி எழுச்சியாகவும் அமைந்துள்ளது திருப்பாவை. திருமலையில் மார்கழி மாதம் முழுவதும் ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை பாசுரங்கள் சுப்ரபாதத்திற்கு பதிலாக சேவிக்கப்படுகின்றது என்பது நாம் பெற்ற பேறு.
3. ஆண்டாள் வாழ்ந்த காலம் பற்றி பல ஆய்வுகள் இருக்கின்றன. அதிகாலை
சுக்கிரன் உதயத்தை ஒட்டி தங்கள் வேலைகளை தொடங்குவது கிராமத்துப் பெண்களின் வழக்கம் திருப்பாவையில் பதினோராம் பாசுரத்தில் வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று என்று ஆண்டாள் சுக்கிரனின் உதயத்தையும் குரு அஸ்தமிப்பதையும் சுட்டிக்காட்டுகிறார். ஆண்டாளின் மார்கழி நீராட்டம் மார்கழி மாதம்
பௌர்ணமி நாள் என்பதையும் ஒப்பு நோக்கி வான சாஸ்திர அறிஞர்கள் ஆராய்ந்து 731ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் நாள் இந்த பாசுரத்தை ஆண்டாள் பாடி இருக்கலாம் என்று ஊகிதித்திருக்கிறார்கள்.
4. தமிழக அரசின் சின்னமாக ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் உள்ளது. அந்த ஊரில் குரங்கு சீமாச்சு என்று ஊர்
மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சீனிவாசன் என்பவர் இந்த கோபுரத்தின் உச்சி வரை உள்ளே அமைந்திருக்கும் நிலை வழியே அல்லாமல் வெளிப்புறத்தில் குரங்கு போல் ஏறுவதில் வல்லவர். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஒருமுறை கோபுரத்தின் உச்சி வரை சென்று நமது இந்திய தேசிய கொடியை கோபுரத்தின் மீது வெற்றிக்
கொடியாக நாட்டினார்!
5. தாய்லாந்து தேசத்தில் அவர்கள் தாய் மொழியில் திருப்பாவை பாசுரங்களை எழுதி வைத்துப் படிக்கிறார்கள் என்பது ஆச்சரியம் இல்லை. ஆனால் மிகுந்த ஆச்சரியமூட்டும் செய்தி என்ன என்றால் தாய்லாந்து அரசர் அரியணை ஏறும் பொழுது அவருடைய ராஜகுரு திருப்பாவை பாசுரங்களை பாடுகிறார்.
இந்த ராஜகுரு வம்சத்தவர் இந்தியாவில் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள். இவர்கள் திருப்பாவை மட்டுமல்லாமல் ஆண்டாளின் நாச்சியார் திருமொழி வாரணம் ஆயிரம் போன்றவற்றையும் ஓதுகிறார்கள். தாய்லாந்தில் பாவை நோன்பையும் அனுஷ்டிக்கிறார்கள்.
6. ஸ்ரீ வடபத்ர சாயி கோவில் கருவறை
கல்வெட்டு ஒன்று மிகப் பழமையானது . இதைக் கொண்டு ஆண்டாளின் கோயில் 739ல் கட்டப்பட்டிருக்கலாம் என்று தெரிய வருகிறது இந்த கோயிலின் முதல் அறங்காவலர் ஸ்ரீ பெரியாழ்வார் தான்.
7. ஆண்டாளைப் பற்றி பேசும் பொழுது கிளியை மறக்க முடியுமா? ஸ்ரீ ராமருக்கு வில், கண்ணனுக்கு புல்லாங்குழல் என்ற
அடையாளம் போல் ஆண்டாளுக்குக் கிளி. திருவரங்கம் பெருமாளை திருமணம் செய்ய வேண்டும் என்று ஆண்டாள் தன் செல்லக் கிளியை தூதாக அனுப்பினாள். தினமும் ஆண்டாள் திருக்கரத்தில் சாத்தப்படும் கிளி வாழைத்தண்டு நூலால் செய்யப்பட்டு மரவள்ளிக்கிழங்கு இலை உடல் பகுதிக்கும் மாதுளைப் பூவில் மூக்கும்
வாலுக்கு வெள்ளை அரளி இலைகளும் இறகுகளுக்கு பச்சை பனை ஓலையும் கால்களை மூங்கில் குச்சிகள் கொண்டும் அமைத்து அரளி நந்தியாவட்டை பூக்கள் கொண்டு அலங்கரிக்கிறார்கள். கிளி பொதுவாக தோட்டத்தில் இருக்கும். ஆனால் ஆண்டாள் கையில் இருக்கும் கிளியே ஒரு தோட்டம்.
ஶ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்🙏🏻
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

Loading suggestions...