கலைஞரின் ஏழ்பரியோன்
கலைஞரின் ஏழ்பரியோன்

@Dmk_Writter

10 Tweets 28 reads Apr 11, 2023
பெத்தமங்கலாரம் மார்ரி சென்னா ரெட்டிக்கு என்ன நடந்தது?
அச்சம்பவம் நடந்து இன்றோடு சுமார் 28 வருடங்கள் ஆகின்றது. யார் இந்த சென்னா ரெட்டி? அவருக்கு நடந்தது என்ன? வாருங்கள் வரலாற்றை புரட்டுவோம். 1993ல் தமிழ்நாட்டில் ஆளுநராக பொறுப்பேற்றார் ஆந்திராவின் முன்னால் முதல்வர் சென்னா ரெட்டி
அப்போது தமிழ்நாட்டின் முதல்வராக மறைந்த அம்மையார் ஜெயலலிதா இருந்தார். ஜனதா தலைவர் சுப்பிரமணியன் சாமி ஜெயலலிதாவின் மீது டான்சி மற்றும் நிலக்கரி ஒப்பந்த ஊழலை விசாரிக்க ஆளுநர் சென்னா ரெட்டியிடம் அனுமதி கேட்டார். அவரும் அனுமதியளிக்கவே ஜெயலலிதாக்கு கோவம் தலைக்கேறியது. அன்று முதலே
ஆளுநருக்கும் ஜெயலலிதாவிற்கும் கடுமையான மோதல் போக்கு நிலவி வந்தது. ஆளுநர் கொடியேற்றும் விழாவில் ஜெயலலிதா பங்கேற்கவே இல்லை. ஜெயலிதாவின் கோபத்தை ஊக்கு விக்கும் விதமாக ஆளுநர் சென்னா ரெட்டி மதுரையில் அரசு அதிகாரிகளிடம் நிர்வாகத்திறனை கேட்டறிந்தார். இது வெந்த புன்னில் வேலை பாய்ச்சியது
போல் ஜெயலலிதாவிற்கு இருந்தது. ஒரு கட்டத்திற்கு மேல் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் ஆளுநர் சென்னா ரெட்டி மீது விவரிக்க முடியாத ஒரு புகாரை வைத்தார். தமிழ்நாட்டு அரசியலில் பெரும் இடியை விழச் செய்த புகார் அது. இதனால் தற்போதைய அடிமை போல் இல்லாத அப்போதைய அதிமுகவினர் வெகுண்டெழுந்தனர்.
சரியாக 10-04-1995 சென்னையிலிருந்து பாண்டிச்சேரி செல்ல ஆயத்தமானர் ஆளுநர் சென்னா ரெட்டி. ஏனென்றால், அவர் பாண்டிச்சேரியின் பொறுப்பு ஆளுநராகவும் பதவி வகித்தார். ஆம், சரியாக மாலை 5 மணியளவில் திண்டிவனம் கடக்கும் போது ஆளுநர் சென்னா ரெட்டியை அப்போதைய அதிமுகவின் மாவட்டச் செயலாளரும்
திருநாவலூர் சட்டமன்ற உறுப்பினர் SSபன்னீர்செல்வம், வானுர் MLA ஆறுமுகம், கண்டமங்கலம் MLA சுப்ரமணியன், விழுப்புரம் MLA ஜெனார்த்தனன் உள்ளிட்டோர் தலைமையில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில், ஆளுநரின் வாகனத்தின் மீது அழுகிய முட்டை, தக்காளி, உருட்டு கட்டை, கற்களை வீசி கான்வாயை
திக்குமுக்காடச் செய்தனர். முன்கூட்டியே போராட்டத்தை கணிக்க தவறினார் அன்றைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விஜயகுமார் அவர்கள் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொள்ள முடியாததால், திண்டிவனம் சார் ஆட்சியரை தொடர்பு கொண்டு கடிந்தார் ஆளுநர் சென்னா ரெட்டி. அந்த சார்-ஆட்சியர் யார் தெரியுமா?
தற்போதைய தமிழ்நாடு மின்வாரியத் தலைவர் திரு.ராஜேஷ் லக்கானி தான். பெரும் காவல்படை வரவழிக்கப்பட்டு சுமார் அரைமணி நேரப் போராட்டத்திற்கு பின்பே ஆளுநர் பாண்டிச்சேரி புறப்பட்டுச் சென்றார். இத்தகைய மோதல் போக்கு என்பது அம்மையார் ஜெயலலிதா போட்ட விதை என்பதனை மறந்துவிட்டு தற்போது ஆளுநருக்கு
எதிராக தமிழ்நாடு அரசு கண்டனத் தீர்மானம் நிறைவேற்றினால். வெளிநடப்பு என்ற பெயரில் எடப்பாடி & கோ நாடகம் நடத்துவதை அனைவரும் அறிவர். ஆளுநருக்கு கொடடுக்கப்பட்ட அதிகாரத்தை மீறி செய்ததால் சட்டமன்ற விதிகள் தளர்த்தப்பட்டு சென்னா ரெட்டி மீது விமர்சனம் வைத்த அதிமுகவிற்கு வந்தால் அது ரத்தம்
மக்களின் உயிரை குடிக்கும் ஆன்லைன் ரமியை தடைசெய்ய ஆர்.என்.ரவியோடு போராடி வெற்றி கண்ட திமுகவிற்கு வந்தால் அதற்குப் பெயர் என்ன? இங்கே நாங்கள் சமரசம் புரிய ஆட்சி கட்டிலில் அமரவில்லை. கொள்கையில் நாங்கள் கலைஞரின் வளர்ப்பு என்பதை மீண்டும் மெய்பித்துள்ளோம்.🔥🔥
#MKS4StateRights 🖤♥️

Loading suggestions...