தந்தை பெரியார் உணவகம்
தந்தை பெரியார் உணவகம்

@JSK9791

11 Tweets 16 reads Sep 21, 2022
#எச்சரிக்கை_பதிவு
எச்சரிக்கை இளைஞர்களே
எச்சரிக்கை மாணவர்களே
சங்கிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள்
உங்க தெருவுல ஒருவரோடு உங்களுக்கு சண்டை, கைகலப்பாகி அவரை அடித்துவிடுகிறீர்கள். அவர் உங்கள் மேல் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கிறார்
. உங்கள் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது.
அது சமயம் உங்களுக்கு ஒரு அரசு வேலைக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அப்போது காவல்துறை உங்கள் மேல் எந்த குற்ற வழக்குமில்லை என்ற சான்றிதழோ,
அல்லது ஏதேனும் வழக்கு இருந்திருந்தால் அதற்கான நீதிமன்ற தீர்ப்பு பற்றிய விவரத்தை பணிக்கு அமர்த்தும் நிர்வாகத்திடம் கொடுப்பார்கள். அதன் அடிப்படையில் தான் உங்களுக்கு வேலை கிடைக்கும்.
தெருவில் இருப்பவருடன் சண்டை எனில் அவரிடம் போய் கையில் காலில் விழுந்து கெஞ்சி வழக்கை சமரசம் செய்து,
வேலை வழங்கும் ஆணையத்திடம் மன்றாடி வேலை பெற வாய்ப்பிருக்கிறது.
ஆனால் கலவர வழக்கில் சிக்கி இருந்தால் வாழ்க்கையில் நல்ல வாய்ப்புகளை நீங்கள் மறந்து விட வேண்டியது தான்.
வழக்கில் நீங்கள் விடுவிக்கப்பட்டாலும் Honorary Acquittal என தீர்ப்பு இருந்தால் மட்டுமே அரசு வேலை கிடைக்கும்.
Acquittal on benefit of doubt என தீர்ப்பு இருந்தாலும் வேலை கிடைக்காது.
அரசு வேலை தான் இல்லை, வெளிநாட்டுக்கு வேலைக்கு போகலாம் என நினைத்தால் வழக்கு முடியும் வரை பாஸ்போர்ட் கிடைக்காது. பாஸ்போர்ட் வைத்திருந்தால் அதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
காரணம் ஏதேனும் சொல்லி பாஸ்போர்ட்டை பெற்றாலும் விசா கிடைக்காது. விசா விண்ணப்ப படிவத்தில் உங்கள் மீது வழக்கு இருக்கா, தண்டிக்கபட்டீர்களா என கேட்டிருப்பார்கள். அதில் பொய் சொல்லி பின்னர் தெரிய வந்தால் உங்களை தூதரகம் நிரந்தரமாக தடை செய்து விடுவார்கள்.
தனியார் கம்பெனியில் வேலைக்கு சேர முயன்றால், அங்கேயும் தனியார் செக்யூரிட்டி ஏஜென்சி வைத்து உங்கள் குற்றப் பின்னணியை விசாரிப்பார்கள். குற்ற வழக்குடன் இருக்கும் ஒருவரை வேலைக்கு அமர்த்த தனியார் நிறுவனங்கள் விரும்பாது.
சுய தொழில் செய்யலாம் என்றால் வங்கி கடன் கிடைப்பதில் சிக்கல் எழும்
குற்ற வழக்கில் நீதிமன்றத்துக்கு அலைந்து கொண்டு சுய தொழில் செய்வதெல்லாம் கடினமான காரியம்.
வழக்கு முடியும் பொழுது பாதி வாழ்க்கை முடிந்திருக்கும், வாய்ப்பெல்லாம் பறி போய் இருக்கும். மீதி வாழ்க்கை சுய வெறுப்போடும் வெறுமையோடும் முடியும்.
சாதி பெருமையை காப்பாற்ற, மதத்தின் மாண்பை காக்க, புரட்சி முழக்கத்தோடு போராட என பலரும் அழைப்பார்கள். “போங்கடா பொழப்பத்தவானுகளா” என அதை கடந்து விடுங்கள்.
உங்கள் வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்வது உங்கள் கையில் மட்டுமே இருக்கிறது.
பிஜேபி க்கு ஓட்டு மட்டுமே குறி சாதி மட்டுமே வளர்க்கும் நாட்டையே அழிக்கும் கரையான்கள்
எட்டப்பன் சந்ததிகளான சங்கிகளை நம்பி போராட்டத்தில் குதித்து விடாதீர்கள்
உங்கள் எதிர்கால வாழ்க்கையை சீரழித்து விடுவார்கள்
சங்கிகளுக்கு கொடுக்கப் பட்டு இருக்கும் ப்ராஜெக்டே மற்ற சாதியினரை
முன்னேற விடாமல் தடுப்பதுதான்
தன சந்ததியினரும் பாதிக்கப் படுவார்களே என்ற சிந்தனை ஏதும் இன்றி
கடவுள் மற்றும் மதத்தின் பேரால் மூளை சலவை செய்யப் பட்ட
பல்லக்கு தூக்குவதை பெருமையாக நினைக்கும் சங்கிகளிடம் இருந்து விலகி இருங்கள்.

Loading suggestions...